மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, ரஜினியின் மனைவியிடம் கேட்டறிந்தார்.
ரஜினிகாந்த் செப் 30 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், அது அறுவைச் சிகிச்சை முறையில் அல்லாமல் சரிசெய்யப்பட்டதாகவும், வீக்கத்தை முற்றிலும் குறைக்கும் விதமாக இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும், ரஜினி இரு நாள்களில் வீடு திரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஜினியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, ரஜினியின் மனைவி லதாவிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். ரஜினி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.