‘லோக் பவன்’ ஆக மாறிய ஆளுநர் மாளிகை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Lok Bhavan |

மக்களை மையமாகக் கொண்ட ஜனநாயகத்தின் நெறிமுறைகளை வலுப்படுத்தும் முக்கிய படி...
ஆளுநர் மாளிகை (கோப்புப்படம்)
ஆளுநர் மாளிகை (கோப்புப்படம்)https://x.com/lokbhavan_tn
1 min read

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் பெயரை லோக் பவன் தமிழ்நாடு என மாற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில் ஜனநாயக அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்தும் விதமாக நாட்டில் உள்ள அனைத்து ராஜ்பவன்களும் லோக் பவன் என்றும், ராஜ் நிவாஸ்களும் லோக் நிவாஸ் என்றும் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று கடந்த நவம்பர் 25 அன்று உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் பெயர் லோக் பவன் என்று மாற்றப்பட்டதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆளுநர் மாளிகை மட்டுமன்றி, அதன் சமூக ஊடகப் பக்கங்களின் பெயர்களும் லோக் பவன் என்று மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“காலனித்துவ மனப்பான்மையில் பெயரிடப்பட்டதிலிருந்து விலகி, மக்களை மையமாகக் கொண்ட ஜனநாயகத்தின் நெறிமுறைகளை வலுப்படுத்தும் முக்கிய படியாக, ‘ராஜ் பவன், தமிழ்நாடு’ என்பது ‘லோக் பவன், தமிழ்நாடு’ என மறுபெயரிடப்படுகிறது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் முறையாகத் தெரிவிக்கப்பட்டபடி, ஆளுநர் அலுவலகம் அனைத்து அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகவும் ‘லோக் பவன்’ என மறுபெயரிடப்படுகிறது.

இந்த மறுபெயரிடுதல் ராஜ் பவன், லோக் பவனாக பரிணமிப்பதை பிரதிபலிக்கிறது, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்திற்கான அதன் நீண்டகால உறுதிப்பாட்டையும், அதன் திட்டங்கள் மற்றும் முயற்சிகளில் தீவிரமான பொதுமக்களின் பங்கேற்பையும் முன்னெடுத்துச் செல்கிறது. நாட்டின் கலாச்சார பாரம்பரியம், நாகரிக மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான பயணத்தில் இது ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் எண்ணங்களுடன் எதிரொலிப்பதை உறுதி செய்கிறது. இந்தப் பெயர் மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

'Raj Bhavan, Tamil Nadu renamed to ‘Lok Bhavan, Tamil Nadu.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in