புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது.
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 அன்று தொடங்கி, மார்ச் 23 வரை நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் கூட்டணி இழுபறி
ஆனாலும், புதுச்சேரியில் திமுக, என்.ஆர். காங்கிரஸ் இரு அணிகளின் கூட்டணியும் இழுபறி நீடித்தது. இதில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் விஜயின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி
இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி, புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவை இன்று சந்தித்துப் பேசிய நிலையில் கூட்டணி உறுதியாகியுள்ளது.
தொகுதிகள் ஒதுக்கீடு
அதன்படி தற்போது கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும் அதிமுக, பாஜக, லட்சிய ஜனநாயகக் கட்சி 14 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த 14 இடங்களில், பாஜக 10 தொகுதிகளிலும் அதிமுக 2 தொகுதிகளிலும் லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
The seat sharing in the NR Congress-BJP alliance in the Puducherry Assembly elections has been finalized.