திருச்சி என்.ஐ.டி பாலியல் அத்துமீறல் விவகாரம்: என்.ஐ.டி நிர்வாகம் விளக்கம்

கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்
திருச்சி என்.ஐ.டி பாலியல் அத்துமீறல் விவகாரம்: என்.ஐ.டி நிர்வாகம் விளக்கம்
1 min read

நேற்று (ஆகஸ்ட் 29) திருச்சி என்.ஐ.டி பெண்கள் விடுதியில் மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் ஒப்பந்த ஊழியர் கதிரேசன். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பெயரில் அவர் நேற்று மாலை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தைச் பெண்கள் விடுதி வார்டன் பேபி சரியான முறையில் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து விடிய விடிய போராட்டம் நடத்தினார்கள் என்.ஐ.டி மாணவர்கள். இதைத் தொடர்ந்து இன்று காலை மாணவிகளிடம் மன்னிப்புக் கோரினார் வார்டன் பேபி. அதன் பிறகு மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது என்.ஐ.டி நிர்வாகம். செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு:

`ஓப்பல் பெண்கள் விடுதியில் ஒப்பந்தப் பணியாளரால் ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் விவகாரத்தால் என்.ஐ.டி நிர்வாகம் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் காரணமான இந்த விவகாரம் தீவிரமாக கருத்தில்கொள்ளப்பட்டது.

இந்த விரும்பத்தகாத விவகாரம் தொடர்பான அனைத்துவித தகவல்களும் என்.ஐ.டி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in