வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ

தமிழகத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் சாஹூ.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நிறைவுபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து விளக்க தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

’தமிழகத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 58 பொது பார்வையாளர்கள் வந்துவிட்டார்கள்’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சாஹூ.

வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று விவரங்களும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும், தபால் வாக்குகள் சுற்றுவாரியாக இல்லாமல் மொத்தமாக எண்ணப்படும், வாக்கு எண்ணிக்கை தொடர்பான புகார்களை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டறையில் பணிபுரியும் 12 டிஆர்ஓக்கள் கவனிப்பார்கள் எனத் தெரிவித்தார் சாஹூ.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 15 கம்பெனி துணை ராணுவப்படையும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in