தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி தீவிரம்!

4 நாட்கள் சிறப்பு முகாம்களின்போது 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி தீவிரம்!
ANI
1 min read

தமிழக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் 23 லட்சம் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த அக்.29-ல் தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நவ. 16, 17, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ளும் வகையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த சிறப்பு முகாம்களின்போது மொத்தம் 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவை போக, அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நேரிலும், இணைய வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி ஒட்டுமொத்தமாக 23 லட்சத்து 9 ஆயிரத்து 391 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த விண்ணப்பங்களுக்கான பரிசீலனை கடந்த நவ. 29 தொடங்கி, டிச.24 வரை ஒரு மாத காலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி நிறைவு பெற்றதும், வரும் ஜன 6-ல் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு, தேசிய வாக்காளர் தினத்தில் வைத்து புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in