தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.2% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 72.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு
ANI

தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி மற்றும் 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.2% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 72.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு காலை முதல் இடைத்தேர்தல் நடைபெற்று வந்தது. இதற்கான வாக்குப்பதிவும் தற்போது நிறைவடைந்துள்ளது. இங்கு மாலை 5 மணி நிலவரப்படி 45.43% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாலை 6 மணிக்கு முன்பு வாக்குச் சாவடி மையத்துக்கு வந்த வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளார்கள். இவர்கள் அனைவரும் வாக்களித்த பிறகே, வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடையும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட மற்றும் 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in