விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி: அண்ணாமலை அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 13-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி: அண்ணாமலை அறிவிப்பு
ANI

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 14-ல் தொடங்கி ஜூன் 21-ல் நிறைவுபெறும், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 13-ல் எண்ணப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்தார். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பாமக கட்சிக்குச் செல்வாக்கு இருப்பதால், இந்த இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அதன் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சித்த மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார். இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி அதிமுக கட்சி இன்னும் தன் நிலைபாட்டைத் தெரிவிக்கவில்லை.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுகவைச் சேர்ந்த புகழேந்தி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராகத் தேர்வானார். 71 வயதான புகழேந்தி உடல் நலக்கோளாறு காரணமாக மரணமடைந்ததால், ஏப்ரல் 8-ல் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in