ஜனவரி 2-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி

கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2-ம் தேதி திருச்சி வந்தடையும் பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இதற்காக ஜனவரி 2-ம் தேதி காலை 10.10 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி ரூ. 19,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

திருச்சி விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பன்னாட்டு விமான முனையத்தைத் திறந்து வைக்கிறார். இதுவும் பிரதமர் அடிக்கல் நாட்டவிருக்கும் வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாகும்.

ஜனவரி 2-ம் தேதி காலை 10.10 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி வரும் பிரதமர் மோடி, பிற்பகல் 1.15 மணிக்கு தனி விமானம் மூலம் லட்சத்தீவு புறப்படுகிறார்.

logo
Kizhakku News
kizhakkunews.in