தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சியால் திமுகவுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளது: பிரதமர் மோடி | PM Modi |

தமிழ்நாட்டு மக்கள் திமுகவின் தவறான ஆட்சி மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நன்கு உணர்ந்துவிட்டனர்...
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
1 min read

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி திமுகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். அதன்படி நாளை (மார்ச் 11) அன்று திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

தமிழ்நாடு, கேரளத்திற்கு வருகை

ஒரு நாள் பயணமாக கேரளம், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி நாளை எர்ணாகுளத்தில் சுமார் ரூ. 10,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து திருச்சிக்கு வரும் பிரதமர், ரூ. 5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைத்து, நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார். மேலும்,பிபிசிஎல்-ன் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கான நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவு

இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- “நாளை மதியம் சுமார் 2:15 மணியளவில், எர்ணாகுளத்தில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்ற உள்ளேன்.கேரளாவின் இடது மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் கொள்கைகளுக்கும் தவறான ஆட்சிக்கும் மாற்றாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சி உயர்ந்து நிற்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சி சார்ந்த அரசியலில் கவனம் செலுத்தி, கேரள இளைஞர்களின் ஆசைகளை நிறைவேற்றும்.

திமுக அதிர்ச்சியில் உள்ளது

அதன்பின் திருச்சியில் மாலை சுமார் 6:30 மணியளவில், நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து கலந்துகொள்வேன். மாநிலம் முழுவதும் உயர்ந்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புகழால் திமுக தெளிவாக அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் திமுகவின் தவறான ஆட்சி மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நன்கு உணர்ந்துவிட்டனர். அதனால்தான், அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நம்பிக்கை மற்றும் முன்னேற்ற திட்டங்களுடன் இணைந்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

PM Modi has posted in X stating "DMK is clearly rattled by the NDA’s rising popularity across the state. The people of Tamil Nadu have seen through the misgovernance and unfulfilled promises of DMK."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in