சேலம் பாஜக கூட்டம்: ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள்

பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.
ஒரே கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள்
ஒரே கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள்@NarendraModi
1 min read

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நேற்று மாலை வாகனப் பேரணி மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து மோடி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு சென்று அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு தற்போது சேலம் வந்துள்ளார்.

சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட முடிவு செய்துள்ள பாமகவுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதுதொடர்புடைய ஒப்பந்தத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in