கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்துள்ளார்.
Published on

6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்துள்ளார்.

பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் தளத்தைச் சென்றடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டரங்கை அடைந்தார் பிரதமர் மோடி. முதல்வர் மு.க. ஸ்டாலினும் நேரு விளையாட்டரங்கைச் சென்றடைந்தார்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 22,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். சென்னையில் இன்று ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி நாளை திருச்சி செல்கிறார். அங்கிருந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி செல்கிறார்.

logo
Kizhakku News
kizhakkunews.in