தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்!

8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வை எழுதுகின்றார்கள்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்!
ANI
1 min read

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) காலை தொடங்கியது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 2024-25 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. பொதுத் தேர்வின் முதல் நாளான இன்று, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்கள், புகார்கள் போன்றவற்றை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறையின் `14417’ எண் மூலம் இலவச உதவி மையத்தை தொடர்புகொள்ளலாம் 

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடர்பாக இன்று காலை சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் கூறியதாவது,

`12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றைய தினம் மாநிலம் முழுவதும் உள்ள 3,316 தேர்வு மையங்கள் மற்றும் 7,518 பள்ளிகளில் தொடங்கி வைத்துள்ளோம். இதில் 8 லட்சத்து 21 ஆயிரத்தி 57 மாணவர்கள் தேர்வெழுத இருக்கிறார்கள். பொதுத் தேர்வு நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் ஓவ்வொரு அறையிலும் கண்காணிப்பாளர் இருக்கும் வகையில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளோம். எந்தவிதமான அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்ற வகையில் 10 அறைகளுக்கு ஒரு கண்காணிப்புப் படை அமைத்திருக்கிறோம்.

ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். முதல்முறையாக பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் கணினியைப் பயன்படுத்தி ஒரு மாணவர் தேர்வெழுதுகிறார்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in