தனிநபர் வருமானம்: நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடம்! | Per Capita Income

தமிழ்நாடு இதே 10 ஆண்டுகளில் 83% வளர்ச்சி கண்டுள்ளது.
தனிநபர் வருமானம்: நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடம்! | Per Capita Income
1 min read

நாட்டின் தனிநபர் வருமான குறியீட்டில் மாநிலங்களுக்கிடையே தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

2024-25-ம் நிதியாண்டில் நாட்டின் தனிநபர் வருமானம் குறித்த தரவுகளை மத்திய நிதியமைச்சகம் மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி, நாட்டின் தனிநபர் நிகர தேதிய வருமானம் ரூ. 1,14,710 ஆர உள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு முந்தைய தரவுகளுடன் (ரூ. 72,805) ஒப்பிடுகையில், 57.6% அதிகரித்துள்ளது.

மாநிலங்கள் அளவில் தனி நபர் வருமானத்தில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. 2024-25-ம் ஆண்டுக்கான கர்நாடகத்தின் தனி நபர் வருமானம் ரூ. 2,04,605 ஆக உள்ளது. 2013-14 உடன் ஒப்பிடுகையில், 93.6% சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் ரூ. 1,96,309 ஆக உள்ளது. மாநிலங்களுக்கிடையே கர்நாடகத்துக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முந்தைய தரவுகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு 83.3% அதிகரித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் ஹரியாணா ரூ. 1,94,285 ஆக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முந்தைய தரவுகளோடு ஒப்பிடுகையில், 55.4% அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அதிகரித்த தனி நபர் வருமானத்தின் தரவுகளை, திமுக ஆட்சியில் அதிகரித்த தனிநபர் வருமானத்தின் தரவுகளோடு ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

2016-ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் ரூ.1,23,206 ஆக இருந்தது. 2021-ல் தனிநபர் வருமானம் ரூ. 1,43,482 ஆக 4.42% அதிகரித்திருந்தது. 2021-ல் ரூ. 1,43,482 ஆக தனிநபர் வருமானம் 2025-ல் ரூ. 1,96,309 ஆக அதிகரித்துள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் 8.15% அதிகரித்துள்ளது.

அதேசமயம், தனிநபர் வருமானத்தின் தேசிய சராசரி கடந்த 10 ஆண்டுகளில் 57% மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாடு இதே 10 ஆண்டுகளில் 83% வளர்ச்சி கண்டுள்ளது. 2024-25-ல் தனிநபர் வருமானத்தின் தேசிய சராசரி ரூ. 1,14,710 ஆக உள்ளது. இதைவிடவும் அதிகமாக தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 1,96,309 ஆக உள்ளது.

இந்தத் தரவுகளைப் பகிர்ந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "இதே உற்சாகத்தோடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்னும் வேகமாகப் பயணிப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிடுகையில், "தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

Per Capita Income | MK Stalin | Tamil Nadu | Finance Ministry | Karnataka | National Average | DMK Government | ADMK Government

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in