
சமாஜ்வாதி கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றைய தினம் பெரம்பூரில் இருந்த அவரது இல்லத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்தது நாங்கள்தான் என்று கூறி தமிழக போலிஸாரிடம் 8 பேர் இன்று சரணடைந்துள்ளனர்.
மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல்கூராய்வு இன்று காலை நடைபெற்றது. அப்போது ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு வருகை தந்தார் விசிக தலைவர் தொல். திருமாவளாவன். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பேசியதாவது:
`ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. உண்மைக் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். 8 பேர் சரணடைந்ததால் புலன் விசாரணையைக் காவல்துறை முடித்துக் கொள்ளக்கூடாது. ஆம்ஸ்ட்ராங் போன்றோருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். கூலிப்படைக் கும்பலைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ என்றார்.
மேலும் `விஜயகாந்ததை எப்படி அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்தார்களோ, அதே போல தலைவர் ஆம்ஸ்ட்ராங்கையும் அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாகக் கோரிக்கை வைக்கிறோம்’ என்று மருத்துவமனையில் பேட்டியளித்தார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி.