புதுச்சேரி, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் வருகிறது பசுமைப் பந்தல்!

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு அரசும், மருத்துவர்களும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் வகையில் சென்னையில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை எளிதில் தாண்டுகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு அரசும், மருத்துவர்களும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே புதுச்சேரி, கோவை போன்ற இடங்களில் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் சிக்னல்களில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் மாநகராட்சி சார்பில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக அண்ணா நகர், அடையாறு, ராயப்பேட்டை உள்ளிட்ட10 பகுதிகளில் 6 மீட்டர் நீளம் மற்றும், 5.5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in