முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து பா. இரஞ்சித் வெளியிட்ட பதிவு!

நாங்கள் வேண்டுமானால், சமீபகாலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்https://x.com/beemji
1 min read

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு நடந்ததை குறைந்தபட்சம் ஒப்புக்கொள்ளவாவது முடியுமா என்று முதல்வர் ஸ்டாலினுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பா. இரஞ்சித்.

உங்களில் ஒருவன் நிகழ்ச்சியின் வழியாக பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் காணொளியை தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (பிப்.15) வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

`தலைவர்-முதல்வர் இப்போது அப்பா என்று அழைக்கிறார்களே?, தமிழ்நாட்டிற்கு மத்திய பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? பெண் கல்விக்கான திட்டங்களால் இந்த 4 ஆண்டுகளில் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்? கூட்டணிக் கட்சிகளுடன் முரண்கள் இருக்கின்றனவா? தில்லி முடிவுகள் இண்டியா கூட்டணிக்கு சம்மட்டி அடி என்று எடப்படி பழனிசாமி கூறியிருக்கிறாரே? பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் இப்போது அதிகமாக வருகின்றதே?’ போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்நிலையில், முதல்வரின் உங்களில் ஒருவன் காணொளியைப் பகிர்ந்து சாதிரீதியிலான வன்கொடுமைகள் குறித்து அவருக்குக் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார் இயக்குநர் பா. இரஞ்சித். அவரது பதிவில் கூறியதாவது,

`தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்வீர்களா?

தங்களின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கும், தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீபகாலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in