தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயம்

4 நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டது மூலம் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளன
தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயம்
1 min read

திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் இன்று (ஆகஸ்ட் 12) முதல் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அரசு விழாவில், திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட ஆணையை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

மார்ச் 2022-ல் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 15-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் பணிகள் முடிந்து இந்த 4 நகராட்சிகளும் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட ஆணைகளை இன்று வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். ஆணைகளை திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் திலகவதி, காரைக்குடி நகராட்சித் தலைவர் முத்து துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டதால் இதன் தலைவர்கள் மேயர்களாகப் பொறுப்பேற்பார்கள். 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டது மூலம் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in