
தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ல் தொடங்குகிறது.
மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை இன்று காலை வெளியிட்டார்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூலை 22 மற்றும் ஜூலை 23-ல் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகிய பிரிவினருக்காக இந்த சிறப்புக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை பொதுப் பிரிவினருக்கான சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகிய பிரிவினருக்காக இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூலை 29 முதல் செப்டம்பர் 3 வரை பொதுக்கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுக்கல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளி 7.5% இடஒதுக்கீடு பிரிவினரை உள்ளடத்தி இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறுகிறது. எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி. வகுப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 மற்றும் செப்டம்பர் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இணையவழி கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
முழு விவரம்: இதை கிளிக் செய்யவும்..