தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 11,538 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் டெங்குவால் இந்த வருடத்தில் இதுவரை 4 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால் 6 வருடங்கள் கழித்து முதல்முறையாக தமிழகத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.
நடப்பாண்டில் தமிழகத்தில் பதிவாகியுள்ள டெங்கு பாதிப்பில் 57.6 % பத்து மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளன. இவை சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகும். கடந்த வரும், தமிழகத்தில் மொத்தம் 9,121 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டனர், அதனால் 12 நபர்கள் மரணமடைந்தனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னையில் நேற்று (செப்.02) தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தலைமையில் சுகாதார அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அது தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்குமாறு பொது சுகாதார இயக்குநருக்கு கோரிக்கை விடுத்தார் செயலாளர் சுப்ரியா சாஹூ. மேலும் டெங்கு பரவலைத் தடுக்க மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக திட்டங்களைச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
சென்னையில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட அளவில் சுகாதாரத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அடுத்த ஒன்றிரெண்டு மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.