தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் உள்ள வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் 25 வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதல்வர் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் 2024 - 26 ஆண்டுகளுக்கான ஆட்களை தேர்வு செய்வது குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.
ஆகஸ்ட் 6 முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 26 வரை பெறப்படுகிறது.
சம்பளம்
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வல்லுநர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ. 65000 வழங்கப்படும்.
மேலும், அவர்களுக்குப் பயணச் செலவு, கைப்பேசி போன்ற செலவுக்கு மாதம் ரூ. 10,000 கூடுதல் தொகையாக வழங்கப்படும்.
கல்வி தகுதி
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தொழில்முறை படிப்புகளில் (பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், கால்நடை மருத்துவ அறிவியல்) தொடர்பாக இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
மேலும் விவரங்களுக்கு: https://www.tn.gov.in/tncmfp/