பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை: அலிஷா அப்துல்லா | Tamil Nadu BJP |

"28 தலைவர்களில் ஒரு கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கூட இல்லை."
பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை: அலிஷா அப்துல்லா | Tamil Nadu BJP |
படம்: https://x.com/alishaabdullah
1 min read

பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என அக்கட்சியின் உறுப்பினரும் பிரபல கார், பைக் பந்தய போட்டியாளருமான அலிஷா அப்துல்லா விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் கட்சியின் மாநில அளவிலான பிரிவுகளுக்கு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்தப் பட்டியல் தமிழக பாஜக சார்பில் செப்டம்பர் 4 அன்று வெளியிடப்பட்டது. இதில் அலிஷா அப்துல்லாவுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதில் அதிருப்தி அடைந்த அலிஷா அப்துல்லா, பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அண்ணாமலைக்காக மட்டுமே நான் பாஜகவில் இணைந்தேன். காரணம், அவர்களுடைய பார்வை தெளிவானது. அவர்களுக்கு மதம், சாதி கிடையாது. கடின உழைப்பு தான். புகழ்பெற்ற விளையாட்டுப் பிரபலமாக இருக்கும் எனக்கு இதைப் பார்க்கும்போது (தமிழக பாஜக அமைப்பாளர்கள் நியமனம்) மனமுடைகிறது.

கட்சிக்காக இரவு, பகலாக மூன்று ஆண்டுகள் உழைத்துள்ளேன். கேசவன் விநாயகம் 12 ஆண்டுகளாகக் கட்சியில் உள்ளார். அவர் எந்த நல்லதும் செய்யவில்லை. என் பணிகளை அவரிடம் காட்ட முற்பட்டபோது, என்னைக் கடந்து சென்று அவர் என்னை அவமதித்துவிட்டார்.

இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பதையே இது உறுதி செய்கிறது. என் உழைப்பு அனைத்தும் குப்பைக்குச் சென்றுவிட்டது. 28 தலைவர்களில் ஒரு கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கூட இல்லை" என்று அலிஷா அப்துல்லா பதிவிட்டுள்ளார்.

அலிஷா அப்துல்லா இந்திய அளவில் கார், பைக் பந்தயங்களில் பங்கேற்ற முதல் பெண் சாம்பியன். இவர் கடந்த 2022-ல் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளராக அலிஷா அப்துல்லா உள்ளார்.

Alisha Abdullah | Tamil Nadu BJP | TN BJP | Annamalai | BJP

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in