ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை: டாஸ்மாக் நிறுவனம்

தற்போது மேற்கு வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில், மாநில அரசு அனுமதியுடன் மதுபான வகைகளை ஸ்விக்கி நிறுவனம் நேரடியாக வீடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை: டாஸ்மாக் நிறுவனம்
ANI
1 min read

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்று டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலம் வீடுகளுக்கு மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளது டாஸ்மாக் நிறுவனம்.

தமிழ்நாட்டில் பீர், ஒயின் போன்ற மிதமான மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக வினியோகம் செய்ய ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட உணவு வினியோக செயலிகள் முடிவு செய்துள்ளதாக முன்பு தகவல் வெளியானது.

ஸ்விக்கி உள்ளிட்ட உணவு வினியோக செயலிகள் ஆரம்பத்தில் உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வினியோகித்து வந்தன. பின்பு மளிகை மற்றும் மருந்துப் பொருட்களையும் நேரடியாக வீடுகளுக்கு வினியோகிக்க ஆரம்பித்தன இந்த செயலிகள்.

இந்தியாவில் கொரானா பரவல் உச்சத்தில் இருந்தபோது, மஹாராஷ்டிரா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்ய தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. கொரானா பரவல் குறைந்ததும் இந்த அனுமதி திரும்பப்பெறப்பட்டது.

தற்போது மேற்கு வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில், மாநில அரசு அனுமதியுடன் மதுபான வகைகளை ஸ்விக்கி நிறுவனம் நேரடியாக வீடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்று இன்று காலை (ஜூலை 17) விளக்கம் அளித்தது டாஸ்மாக் நிறுவனம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in