பூஜைக்கும், அன்னதானத்துக்கும் தடையில்லை: நிர்மலா சீதாராமனுக்கு சேகர் பாபு பதில்

"சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது."
பூஜைக்கும், அன்னதானத்துக்கும் தடையில்லை: நிர்மலா சீதாராமனுக்கு சேகர் பாபு பதில்
படம்: https://twitter.com/PKSekarbabu
1 min read

திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காகவே வதந்திகள் பரப்பப்படுவதாக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் சேகர் பாபு பதிவிட்டுள்ளதாவது:

"சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத் துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது."

சேகர் பாபுவின் இந்தப் பதிவுக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தப் பதிவின் கீழே பதிலளித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளதாவது:

"உங்கள் ட்வீட்-க்கு பதில்கொடுக்கும் வகையிலே தரவுடன்/ஆதாரத்துடன் மக்கள் எடுத்துகாட்டுகிறார்கள். இந்துக்களின் வழிபாட்டு முறையில், மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது.

மேலும், சின்ன சின்ன தனியார் கோவிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும், காவல்துறையினர் அங்கேயிருந்து அநாவசிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆதலால், அமைச்சர் அவர்களே, இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலையத் துறை அமைச்சராக நீங்கள் முன்நின்று காப்பற்ற வேண்டும்.

தடையில்லையேல், உங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in