
இன்று (ஆகஸ்ட் 18) தொடங்கி தமிழகத்தில் உள்ள 20 ரயில் நிலையங்களில் புதிதாக நின்று செல்லும் ரயில்களின் விவரங்கள் அடங்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் எக்ஸ் கணக்கில் இன்று வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ள விவரங்கள்
ஆகஸ்ட் 18:
குடியாத்தம் மற்றும் வாணியம்பாடி ரயில் நிலையம்: 13351 தன்பாத் – ஆலப்புழா விரைவு ரயில்
வளத்தூர் ரயில் நிலையம்: 16087 அரக்கோணம் – சேலம் மெமு விரைவு ரயில் மற்றும் 16088 சேலம் – அரக்கோணம் மெமு விரைவு ரயில்
மேல்பட்டி ரயில் நிலையம்: 16087 அரக்கோணம் – சேலம் மெமு விரைவு ரயில்
வாலாஜா சாலை ரயில் நிலையம்: 12602 மங்களூரூ – சென்னை சென்ட்ரல் மெயில்
வெல்லிங்டன் ரயில் நிலையம்: 56137 உதகமண்டலம் – மேட்டுப்பாளையம் பயணியர் ரயில்
இருகூர் ரயில் நிலையம்: 16843 திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில், 16844 பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில், 16321 நாகர்கோவில் – கோயமுத்தூர் விரைவு ரயில் மற்றும் 16322 கோயமுத்தூர் – நாகர்கோவில் விரைவு ரயில்
சிங்காநல்லூர் ஹால்ட் ரயில் நிலையம்: 16321 நாகர்கோவில் – கோயமுத்தூர் விரைவு ரயில், 16322 கோயமுத்தூர் – நாகர்கோவில் விரைவு ரயில் மற்றும் 16844 பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில்
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம்: 16235 தூத்துக்குடி – மைசூரூ விரைவு ரயில் மற்றும் 16236 மைசூரூ – தூத்துக்குடி விரைவு ரயில்
கொடைக்கானல் சாலை ரயில் நிலையம்: 12665 ஹௌரா – கன்னியாகுமரி விரைவு ரயில்
கொளத்தூர் ரயில் நிலையம்: 16847 மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரயில் மற்றும் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில்
வாடிப்பட்டி ரயில் நிலையம்: 16846 செங்கோட்டை – ஈரோடு விரைவு ரயில் மற்றும் 16845 ஈரோடு – செங்கோட்டை விரைவு ரயில்
ஆரணி சாலை ரயில் நிலையம்: 17408 மன்னார்குடி – திருப்பதி விரைவு ரயில்
பாபநாசம் ரயில் நிலையம்: 16780 ராமேஸ்வரம் – திருப்பதி விரைவு ரயில்
திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையம்: 16232 மைசூரூ – கடலூர் துறைமுகம் விரைவு ரயில்
மேலப்பாளையம் ரயில் நிலையம்: 16321 நாகர்கோவில் – கோயமுத்தூர் விரைவு ரயில் மற்றும் 16322 கோயமுத்தூர் – நாகர்கோவில் விரைவு ரயில்
ஆரல்வாய்மொழி ரயில் நிலையம்: 16321 நாகர்கோவில் – கோயமுத்தூர் விரைவு ரயில் மற்றும் 16322 கோயமுத்தூர் – நாகர்கோவில் விரைவு ரயில்
நாங்குநேரி ரயில் நிலையம்: 16729 மதுரை – புனலூர் விரைவு ரயில் மற்றும் புனலூர் – மதுரை விரைவு ரயில்
ஆரல்வாய்மொழி ரயில் நிலையம்: 16729 மதுரை – புனலூர் விரைவு ரயில் மற்றும் 16730 புனலூர் – மதுரை விரைவு ரயில்
ஆகஸ்ட் 19
ஆரணி சாலை ரயில் நிலையம்: 17407 திருப்பதி – மன்னார்குடி விரைவு ரயில் மற்றும்
ஆகஸ்ட் 21
பாபநாசம் ரயில் நிலையம்: 16779 திருப்பதி – ராமேஸ்வரம் விரைவு ரயில்
ஆகஸ்ட் 22
ஆம்பூர் ரயில் நிலையம்: 12691 சென்னை சென்ட்ரல் – ஷிமோகா டவுன் அதிவிரைவு ரயில்
ஆகஸ்ட் 23
ஆம்பூர் ரயில் நிலையம்: 12692 ஷிமோகா டவுன் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்
கொடைக்கானல் சாலை ரயில் நிலையம்: 12666 கன்னியாகுமரி – ஹௌரா விரைவு ரயில்
ஆகஸ்ட் 24
வள்ளியூர் ரயில் நிலையம்: 16861 புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயில்