திருநெல்வேலியில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவின் பிராந்திய மையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கூடங்குளம் அருகே ராதாபுரத்தில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் அரக்கோணத்தில் தேசியப் பேரிடர் மீட்புக் குழு மையம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால், அரக்கோணத்திலிருந்து தேசியப் பேரிடர் மீட்புக் குழு அனுப்பப்படும்.
இந்த நிலையில், தென் தமிழகம் மற்றும் கேரளத்தில் பேரிடர்கள் ஏற்பட்டால் இதை எதிர்கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ராதாபுரத்தில் இந்த மையமானது அமைக்கப்பட்டுள்ளது.
கதிரியக்கம், உயிரியல் போன்ற பேரிடர்கள் ஏற்பாட்டாலும்கூட, இதைச் சமாளிக்கும் வகையிலான அம்சங்கள் இந்த மையத்தில் இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 30 பேர் கொண்ட குழு 24 மணி நேரமும் பணியில் இருக்கும் எனத் தெரிகிறது.
நிரந்தரமான இடம் கிடைக்கும் வரை இந்தக் குழு ராதாபுரத்தில் தங்கும் விடுதியிலிருந்தபடி தற்காலிகமாகச் செயல்படவுள்ளது.