என் மகன் ஏற்கெனவே மாநில பொறுப்பில் இருந்துள்ளார்: நயினார் நாகேந்திரன் விளக்கம் | Nainar Nagendran |

அதிமுக உட்கட்சி பிரச்னையை அவர்கள்தான் சரி செய்து கொள்ள வேண்டும் என்றும் பேச்சு...
என் மகன் ஏற்கெனவே மாநில பொறுப்பில் இருந்துள்ளார்: நயினார் நாகேந்திரன் விளக்கம் | Nainar Nagendran |
படம் : https://x.com/NainarBJP
1 min read

நயினார் பாலாஜி ஏற்கெனவே மாநில பொறுப்பில் இருந்துள்ளார் என்ற அடிப்படையில்தான் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

தமிழக பாஜகவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவுக்குள் குடும்ப அரசியலா என்ற சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், தன் மகனுக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது - “தமிழக பாஜகவில் விளையாட்டு, மருத்துவம் என 25 பிரிவுகளுக்கு மாநில அமைப்பாளர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே நயினார் பாலாஜி பாஜக இளைஞரணி, மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். அதன் அடிப்படையில்தான் அவருக்கு தற்போது முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் பல பொறுப்புகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார்.

அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்த கேள்விக்கு - அதிமுகவின் உட்கட்சி பிரச்னைகளை அவர்கள்தான் பேசித் தீர்க்க வேண்டும். அதைக் கூட்டணி முடிவு செய்யப்பட்டபோதே உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். பாஜகவில் கோஷ்டி மோதல் கிடையாது” என்று கூறினார்.

Nainar Nagendran | BJP | Nainar Balaji | TN BJP |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in