
திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே தர்பங்கா விரைவு ரயில் சரக்கு ரயில் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மைசூரிலிருந்து பிஹார் மாநிலம் தர்பங்கா புறப்பட்ட பாக்மதி விரைவு ரயிலானது (12578) திருவள்ளூர் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சில பெட்டிகள் தடம்புரண்டதாகத் தெரிகிறது. ரயில் பெட்டிகள் தீப்பிடித்துள்ளதாகவும் செய்திகளில் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விபத்து குறித்து விளக்கிய அமைச்சர் நாசர், ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறினார். காயமடைந்தவர்களில் 16 பேருக்கு சிறியளவிலான காயம் என்றும் 3 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.