தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக நவாஸ் கனி எம்.பி. தேர்வு

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகளை சட்டவிரோதமான முறையில் குறைவான தொகைக்கு குத்தகைக்கு அளித்த விவகாரம் அப்துல் ரகுமானுக்கு சிக்கலை ஏற்படுத்தியது
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி. நவாஸ் கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவாஸ் கனிக்கு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) கட்சியைச் சேர்ந்த எம். அப்துல் ரகுமான் 2021 ஜூலையில் தமிழக வக்ஃபு வாரியத்தின் தலைவராக நியமியக்கப்பட்டார். 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிட்டது ஐ.யு.எம்.எல். ஆனால் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.

இதைத் தொடர்ந்து ஐ.யு.எம்.எல். கட்சியைச் சேர்ந்த எம். அப்துல் ரகுமான் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவராக நியமியக்கப்பட்டார். ஆனால் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகளை சட்டவிரோதமான முறையில் குறைவான தொகைக்கு குத்தகைக்கு அளித்த விவகாரம் அப்துல் ரகுமானுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதை முன்வைத்து அவர் மீது பொதுவெளியில் விமர்சனங்கள் எழுந்தன.

எனவே இதைத் தொடர்ந்து வக்ஃபு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் ராஜினாமா செய்வதாக கடந்த ஆகஸ்ட் 19-ல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். அதன் பிறகு அப்துல் ரகுமானின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்தது.

இந்நிலையில் செப்.18-ல் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் உள்ள ஒரு காலியிடத்துக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தேர்தெடுக்கப்பட்டதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராக எம்.பி. நவாஸ்கனி தேர்தெடுக்கப்பட்டுள்ளதாகத் செய்தி வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in