முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை காலமானார்! | Sabareesan |

வேதமூர்த்தியின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை காலமானார்! | Sabareesan |
1 min read

முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். இவருடைய தந்தை வேதமூர்த்தி. சபரீசன் மற்றும் செந்தாமரை சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார்கள்.

சபரீசனின் தந்தை வேதமூர்த்தி அண்மைக் காலமாக உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக, சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வேதமூர்த்திக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் வேதமூர்த்தி மறைந்துள்ளார்.

வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வேதமூர்த்தியின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

வேதமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"எனது மருமகன் சபரீசன் அவர்களின் தந்தையார் வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் வேதமூர்த்தி. முக்கூடல் அருகே அரிநாயகபுரத்தைச் சேர்ந்த வேதமூர்த்தி, வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

MK Stalin | Vedamurthy | Sabareesan |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in