"ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு..": காணொளியை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

"அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்…"
"ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு..": காணொளியை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய காணொளியை முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்த நிலையில், அவர்களைக் குறிப்பிட்டு முதல்வர் இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்புடைய பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்.

முதலமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு… எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்…" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in