'ரூ' குறியீடு சர்ச்சை: முதல்வர் விளக்கம்
தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்த உங்களில் ஒருவன் கேள்வி - பதில் காணொளியை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில் ரூ குறியீடு சர்ச்சை குறித்து அவர் பதிலளித்ததாவது:
மொழிக்கொள்கையில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பதைக் காண்பிக்கவே பட்ஜெட் இலச்சினையில் ரூ என்கிற எழுத்தைப் பயன்படுத்தினோம். அவ்வளவுதான். ஆனால் தமிழைப் பிடிக்காதவர்கள் அதைப் பெரிய செய்தியாக மாற்றிவிட்டார்கள். மத்திய அரசிடம் 100 நாள் வேலைத் திட்டத்தின் சம்பளத்தைத் தாருங்கள், பேரிடர் நிதி தாருங்கள், பள்ளிக் கல்வி நிதியை விடுவியுங்கள் என்று தமிழ்நாடு சார்பாக 100 கோரிக்கைகள் வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத மத்திய நிதியமைச்சர், இதைப் பற்றி பேசியுள்ளார். அவர்களே பல பதிவுகளில் ரூ பயன்படுத்தியுள்ளார்கள். ஆங்கிலத்திலும் எல்லோரும் rs என்று சுருக்கமாகவே எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்னையாகத் தெரியாதவர்களுக்கு இதுதான் பிரச்னையாகத் தெரிகிறது போல. மொத்தத்தில் இந்திய அளவில் நம்ம பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட் என்று கூறியுள்ளார்.