முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்ANI

கோடைக் காலத்தில் தடையின்றி குடிநீர்: முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

“கோடைக் காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்”.

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்துள்ளது. மே மாதம் முன்பே இப்படி வெயில் அடித்தால், மே மாதத்தில் எப்படி இருக்குமோ என்ற கவலை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பொதுவாக வெயில் காலம் என்றாலே குடிநீரின் தேவை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்கவும், தடையின்றித் குடிநீ வழங்கவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in