சென்னையில் மீண்டும் ஃபோர்டு உற்பத்தி ஆலை திறக்கப்படும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிவிப்பு | Ford |

முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது...
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர் சந்திப்பு
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர் சந்திப்பு
1 min read

தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலை திறக்கப்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

அமெரிக்காவின் முக்கிய கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டின் உற்பத்தி ஆலைகள் சென்னை மற்றும் குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஆனால் நாட்டில் ஃபோர்டின் விற்பனை திடீரென்று படிப்படியாகச் சரியத் தொடங்கியது. இதையடுத்து சென்னை மறைமலை நகரில் செயல்பட்டு வந்த கார் உற்பத்தி ஆலையை மூடுவதாகக் கடந்த 2021-ல் ஃபோர்டு நிறுவனம் அறிவித்து, ஆலைகளை மூடியது.

இதையடுத்து கடந்த 2024 செப்டம்பரில் அரசுமுறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் உற்பத்தியைத் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனடிப்படையில் இன்று ஃபோர்டு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“புதிய தொழில்களைத் தொடங்குவதில் தமிழ்நாடு மேம்பட்ட அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. இதனால்தா இந்திய அளவில் இரட்டை இலக்கு வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டியிருக்கிறது. தமிழ்நாட்டை நோக்கி பல நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றன. குறிப்பாக நீண்ட நாட்களாக பலக்கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இன்று தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தனது தொழிற்சாலையைத் தொடங்கும் என்று உறுதி அளித்து, அதற்கான ஒப்பந்தம் கையெடுத்திடப்பட்டிருக்கிறது.

தற்போது இருக்கும் உலக அரசியல் இருக்கும் சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருபக்கம் பல நாடுகளின் மேல் வரிப்போர் நிகழ்த்தப்படுகிறது. மறுபக்கம் நிறுவனங்கள் அங்கு செல்லக்கூடாது அங்கு செல்லக்கூடாது என்று பெரிய நெருக்கடிகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் முதலீட்டை வெற்றிகரமாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்துள்ளோம்.

தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் ரூ. 3,250 கோடி முதலீடு செய்யப் போகிறது. புதிதாக 600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மறைமுகமாக இன்னும் அதிக வேலை வாய்ப்புகள் வந்து சேரும்.

2,35,000 புதிய இன்ஜின்களை முதற்கட்டமாக ஃபோர்டு நிறுவனம் தயாரிக்கும் பணிகளைத் தொடங்க இருக்கிறார்கள். ஏற்கெனவே ஃபோர்டு டிஜிசிசியில் 12,000 இளைஞர்கள் பணியாற்றி வரும் வேளையில், இதனை உயர்த்த வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்” என்றார்.

Summary

Minister T.R.B. Rajaa stated that the agreement has been signed for reopening Ford Company's manufacturing plant in Tamil Nadu.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in