அமேசானில் இருந்து நூடுல்ஸ் வாங்கிச் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு: அமைச்சர் விளக்கம்

மொத்த விற்பனைக் கூடத்தை முழுமையாக சோதனையிட்டபோது அங்கே 800 கிலோ அளவிலான காலாவதியான பொருட்கள் இருப்பது தெரிய வந்தது
அமேசானில் இருந்து நூடுல்ஸ் வாங்கிச் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு: அமைச்சர் விளக்கம்
1 min read

அமேசான் தளத்தில் விற்கப்பட்ட சைனீஸ் நூடுல்ஸை வாங்கிச் சாப்பிட்டு திருச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

திருச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரின் இல்லத்தில் அமேசான் தளத்தில் விற்கப்பட்ட சைனீஸ் நூடுல்ஸை வாங்கியுள்ளனர். இதைச் சமைத்த பிறகு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். அவர் பேசியவை பின்வருமாறு:

`சிறுமி இறந்த செய்தி கிடைத்தவுடன் உணவுப்பாதுகாப்புத்துறை அது குறித்து விசாரணை மேற்கொண்டது. அப்போது நூடுல்ஸ் சாப்பிட்ட பிறகே சிறுமி இறந்தபோனது தெரிய வந்தது. மேலும் அது சைனீஸ் புல்டாக் என்ற நூடுல்ஸ் வகை என்பதும் தெரிய வந்தது.

பிறகு அந்த நூடுல்ஸ் திருச்சியில் விற்கப்படும் இடங்கள் குறித்து விசாரணையில் இறங்கியது உணவுப்பாதுகாப்புத் துறை. அதைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள மொத்த விற்பனைக் கூடம் ஒன்றில் சென்று பார்த்தபோது, அங்கே இதே நூடுல்ஸ் வகை ஸ்டாக் வைத்திருப்பது தெரிய வந்தது.

அந்த மொத்த விற்பனைக் கூடத்தை முழுமையாக சோதனையிட்டபோது அங்கே 800 கிலோ அளவிலான காலாவதியான பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறுமி உயிரிழந்த தகவல் கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in