மருத்துவ முகாம்களும், மருத்துவர்கள் குழுவும்: தவெக மாநாட்டில் செய்துள்ள முன்னேற்பாடுகள்

தலைசிறந்த மருத்துவர்கள் கொண்ட குழுவை வைத்து மாநாட்டில் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்பதை தீவிரமாக ஆராய்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்களும், மருத்துவர்கள் குழுவும்: தவெக மாநாட்டில் செய்துள்ள முன்னேற்பாடுகள்
1 min read

50 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்களுடன் தவெக முதல் மாநில மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பிற்காக விரிவான நிலையில் மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார் தவெகவின் சுகாதாரக்குழு தலைவர் மருத்துவர் பிரபு.

மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து மருத்துவர் டிகே. பிரபு தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:

`30 தலைசிறந்த மருத்துவர்கள் கொண்ட குழுவை கொண்டு மாநாட்டில் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்பதை பற்றி தீவிர ஆராய்ந்து, அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

150 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட உள்ளனர். 25 தனியார் ஆம்புலன்ஸ் மாநாடு தொடங்கி முடியும் வரை தயார் நிலையில் இருக்கும்.

மொத்தம் 18 மெடிக்கல் கேம்ப்கள் மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும். உடனடி சிகிச்சைக்குத் தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் அதில் இருக்கும்.

ஒவ்வொரு மெடிக்கல் கேம்ப் அருகிலும் ஒரு ஆம்புலன்ஸ் நிற்கும். மொத்தம் 300 முதல் 350 பேர் மாநாட்டின் மருத்துவ குழுவில் இடம் பெற்றுள்ளனர்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in