தமிழ்நாட்டில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியல்!

உலக பாரம்பரியச் சின்னம் எனும் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்ற செஞ்சிக்கோட்டை.
செஞ்சிக்கோட்டை
செஞ்சிக்கோட்டை
2 min read

| Gingee Fort | UNESCO

உலகப் பாரம்பரியச் சின்னங்களில் செஞ்சிக்கோட்டையை இணைத்து யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. மராட்டிய ஆட்சியில் ராணுவத்தின் உத்தியாக 12 கோட்டைகள் உள்ளன. இதில் சல்ஹேர், ஷிவ்னேரி, லோகாட், கந்தேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க், சிந்துதுர்க் ஆகிய 11 கோட்டைகள் மஹாராஷ்டிரத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் செஞ்சிக்கோட்டையும் அடக்கம். மஹாராஷ்டிரத்துக்கு வெளியே இருக்கும் ஒரேயொரு கோட்டை இது.

மராட்டிய ராணுவ நிலப்பரப்புக்கு உலக பாரம்பரியச் சின்னம் என்ற அங்கீகாரம் பெற கடந்த 2024 ஜனவரியில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. 18 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள், தொழில்நுட்பக் கூட்டங்கள், நேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், உலக பாரம்பரியப் பட்டியலில் இதை இணைக்க யுனெஸ்கோ ஒப்புதல் அளித்துள்ளது. பாரிஸில் அமைந்துள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஜூலை 11 அன்று மாலை நடைபெற்ற உலக பாரம்பரியச் சின்னங்களுக்கான குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட 8 கோட்டைகள் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 4 கோட்டைகள் மஹாராஷ்டிர அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மராட்டிய ராணுவ நிலபரப்பானது யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள 44-வது சொத்தாகும். யுனெஸ்கோவின் அங்கீகாரத்தை அதிகம் பெற்ற நாடுகள் வரிசையில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 2-வது நாடாக உள்ளது.

செஞ்சிக்கோட்டையை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

ANI

நீலகிரி மலை ரயில்

படம்: https://www.tamilnadutourism.tn.gov.in/destinations/the-nilgiri-mountain-railway

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

படம்: https://thanjavur.nic.in/ta/tourist-place/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/

கங்கைகொண்ட சோழபுரம்

படம்: https://ariyalur.nic.in/ta/tourist-place/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/

தஞ்சை பெரிய கோயில்

படம்: https://thanjavur.nic.in/ta/tourist-place/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/

செஞ்சி கோட்டை

படம்: https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2018/04/2018041933.jpg

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in