திராவிட வெற்றிக் கழகம்: புதிய கட்சியைத் தொடங்கினார் மல்லை சத்யா! | DVK | Mallai Sathya |

திராவிடப் பின்னணியிலிருந்து வந்திருப்பதால், கட்சியின் பெயரிலும் திராவிடத்தை இணைத்துள்ளார் மல்லை சத்யா.
Mallai Sathya formed new party and named it as Dravida Vettri Kazhagam
மல்லை சத்யா (கோப்புப் படம்)
1 min read

திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார் மல்லை சத்யா.

மதிமுகவின் முதன்மைச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ கடந்த 2024-ல் பொறுப்பேற்றார். துரை வைகோ பொறுப்புக்கு வந்த பிறகு, இவருக்கும் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக துரை வைகோ அறிவிக்க, இதற்கு மல்லை சத்யா தான் காரணம் என்று சொல்லப்பட்டது. பிறகு, இருவருக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்த வைகோ முயற்சித்ததாகக் கூறப்பட்டது.

ஆனால், இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப்போல தனக்கு மல்லை சத்யா துரோகம் செய்ததாக வைகோ குற்றம்சாட்டினார்.

இந்தப் பிளவு பெரும் பிளவாக வெடிக்க, மல்லை சத்யாவை முதலில் தற்காலிகமாக நீக்குவதாகத் தெரிவித்த வைகோ, பிறகு அவரைக் கட்சியிலிருந்து நிரந்திரமாக நீக்குவதாக அறிவித்தார்.

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளதாகவும் நவம்பர் 20 அன்று அடையாறில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் மல்லை சத்யா தெரிவித்தார்.

இதன்படி, புதிய கட்சியை அவர் இன்று தொடங்கினார். அடையாறில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பெயரை வெளியிட்டார். திராவிட வெற்றிக் கழகம் என்று கட்சிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. திராவிடப் பின்னணியிலிருந்து வந்திருப்பதால், கட்சியின் பெயரிலும் திராவிடத்தை இணைத்துள்ளார் மல்லை சத்யா. கருப்பு, சிவப்பு நிறத்தில் கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கொடியில் 7 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

Summary

Mallai Sathya who was expelled from MDMK by Vaiko formed new party and named it as Dravida Vettri Kazhagam.

Dravida Vettri Kazhagam | DVK | Mallai Sathya | Vaiko | MDMK |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in