மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை!

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை!
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை!
1 min read

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் இன்று காலை மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச் செயலாளராக இருந்தவர் பாலசுப்பிரமணியன். இன்று காலை இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள வல்லபாய் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று அவரிடம் பிரச்னை செய்து அவரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பித்து ஓட அவர் முயற்சித்தும், விடாமல் துரத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தல்லாகுளம் காவல் துறையினர், பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 அன்று படுகொலை செய்யப்பட்டார். அடுத்த 10 நாள்களில் மீண்டும் ஒரு படுகொலை சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in