மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
படம்: https://twitter.com/ANI

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கள்ளழகர் ஏப்ரல் 23 அன்று அதிகாலை வைகையாற்றில் எழுந்தருள்கிறார்.
Published on

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஏப்ரல் 23 வரை நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 19-ல் பட்டாபிஷேகமும், ஏப்ரல் 20-ல் திக்விஜயம், ஏப்ரல் 21-ல் மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், ஏப்ரல் 22-ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

கள்ளழகர் ஏப்ரல் 23 அன்று அதிகாலை வைகையாற்றில் எழுந்தருள்கிறார். திருவிழா நாள்களில் சுவாமியும், அம்மனும் தினசரி காலை மற்றும் மாலை மாசி வீதிகளில் எழுந்தருளவுள்ளன.

logo
Kizhakku News
kizhakkunews.in