மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடக்கம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடக்கம்@madurai_aiims

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடக்கம்

5 ஆண்டுகளுக்கு மேலாக கட்டட பணிகள் துவங்காமல் இருந்தது.
Published on

2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

கட்டட பணிகள் நடைபெறுவது குறித்த புகைப்படங்களை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, 2019-ல் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அதற்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக கட்டட பணிகள் துவங்காமல் இருந்தது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரி நிலையில், இந்த டெண்டரை எல் & டி நிறுவனம் கைப்பற்றியது.

இதன் பிறகு சமீபத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை மற்றும் சமன்படுத்தும் வேலை நடைபெற்றது.

950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

இந்நிலையில், கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in