ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

மொத்தம் 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்
1 min read

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட 6 இடங்களிலும் நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் தமிழ்நாடு முழுக்க அக்டோபர் 6 அன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. இதற்கு காவல் துறை தரப்பில் அனுமதி வழங்குவதில் பிரச்னை நீடித்து வருகிறது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறார். அணிவகுப்புகளுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என காவல் துறை தரப்பில் அற்ப காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்படுவது ஏன் எனக் கேள்வியெழுப்பிய நீதிபதி, நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என எச்சரித்தார். மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மொத்தம் 58 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், 42 இடங்களுக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 16 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து முடிவெடுத்து செவ்வாய்க்கிழமை பதிலளிக்க வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மொத்தம் 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அனுமதி மறுக்கப்பட்டிருந்த 16 இடங்களில் 12 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதி, மீதமுள்ள 6 இடங்களிலும் நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in