மதுரை மெட்ரோ ரயில்: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு | Madurai Metro |

மத்திய அரசு நிராகரிக்கவில்லை, திருத்தங்கள் கோரி அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது...
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை (கோப்புப்படம்)ANI
1 min read

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்து மத்திய அரசுக்குச் சமர்ப்பித்தது. ஆனால், மத்திய அரசு அந்தத் திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்பியது. அத்துடன், மெட்ரோ ரயில் கொள்கையின்படி 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களில் பெருமளவு பொது போக்குவரத்து திட்டங்களைத் தொடங்கலாம். ஆனால், 2011 கணக்கின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரை நகரத்தின் மக்கள் தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே இருக்கிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் சேவையைச் செயல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், “2011-ன் மக்கள் தொகை கணக்கெடுப்பு, சுமார் 14 ஆண்டு முந்தையது. மதுரை மாவட்டத்தில் தற்போது 27, 29, 671 வாக்காளர்கள் உள்ளார்கள். அவ்வாறெனில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சுற்றுலா பயணிகள், பதிவு செய்யப்படாத குடியிருப்பு வாசிகள் ஆகியோரையும் சேர்த்தால் மதுரையின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும். எனவே மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை முறையாக சரி செய்து மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையைப் பரிசீலித்து மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. சில விளக்கங்கள் கேட்டு திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 16-க்கு ஒத்தி வைத்தனர்.

Summary

The Madurai branch of the High Court has ordered the central and state governments to respond to a case seeking implementation of the Metro Rail project in Madurai.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in