அமலாக்கத்துறைக்கு எதிரான அமைச்சர் ஐ. பெரியசாமியின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் | Madras HC |

அமைச்சர் ஐ.பெரியசாமி, அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்கலாம்..
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
1 min read

அமலாக்கத்துறை நோட்டீஸுக்கு எதிராக அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2006-11 காலக்கட்டத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.01 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

அமலாக்கத்துறை சோதனை

இதன் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மகனும், பழனி தொகுதி திமுக எம்எல்ஏவுமான செந்தில்குமார், மகள் இந்திரா உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் சோதனை நடத்தியது. அப்போது, சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக சொத்துகளை முடக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

அமலாக்கத்துறைக்கு எதிராக வழக்கு

இந்த நோட்டீஸை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணையை எதிர்த்தும் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த டிசம்பர் 17 அன்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அமலாக்கத்துறை விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மனு தொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 5-க்கு ஒத்திவைத்தனர்.

அமைச்சரின் மனு தள்ளுபடி

அதன்படி இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: “அமலாக்கத் துறை விசாரணை செய்வதில் எந்த தவறும் இல்லை என்பதால் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்கலாம்” என்று கூறி, அமைச்சரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Summary

The Madras High Court has dismissed the petition filed by Minister I. Periyasamy against the Enforcement Directorate's notice.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in