ஜாய் கிரிஸில்டாவைத் திருமணம் செய்தது உண்மைதான்: மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புதல் | Madhampatty Rangaraj |

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு...
ஜாய் கிரிஸில்டாவைத் திருமணம் செய்தது உண்மைதான் - மாதம்பட்டி ரங்கராஜ் (கோப்புப்படம்)
ஜாய் கிரிஸில்டாவைத் திருமணம் செய்தது உண்மைதான் - மாதம்பட்டி ரங்கராஜ் (கோப்புப்படம்)
1 min read

ஜாய் கிரிஸில்டாவைத் தான் திருமணம் செய்தது உண்மைதான் என மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துவிட்டு, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா காவல் துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து மகளிர் ஆணையத்திலும் அவர் புகார் அளித்த நிலையில், இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது.

அதனடிப்படையில், கடந்த அக்டோபர் 16 அன்று மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு இரு தரப்பினரும் ஆஜராகினர். குறிப்பாக மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியுடன் ஆஜரானார். அன்றுமுதல் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜாய் கிரிஸில்டா தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பதால், மருத்துவச் செலவு, வீட்டு வாடகை மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ. 6.5 லட்சத்தை அவர் வழங்க வேண்டும் என்று ஜாய் கிரிஸில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடந்த அக்டோபர் 31 அன்று ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் மகளிர் ஆணையத்தின் விசாரணையில் ஜாய் கிரிஸில்டாவைத் தான் திருமணம் செய்துகொண்டதாகவும், அவருக்குத் தற்போது பிறந்தது தனது குழந்தைதான் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இன்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை ஆணையருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஆணையத்திற்கும் பரிந்துரைத்து மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, வழக்கு முடியும்வரை குழந்தையின் பராமரிப்புச் செலவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Summary

Mathampatty Rangaraj admitted that he had married Joy Crizildaa despite being already married. Women’s Commission has suggested police department to take legal action against him.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in