இறப்பு அதிகரிக்கக் காரணம் என்ன?: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

எரியும் எண்ணையில் குளிர்காயும் வகையில் உள்ளது எடப்பாடி பழனிசாமியின் பேச்சு.
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
1 min read

சிகிச்சைக்கு சிலர் தயங்கியதால் இறப்பு அதிகரித்துள்ளது என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் விஷச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். சுரேஷின் இறுதிச்சடங்கிற்குச் சென்றவர்களில் பலர் பாக்கெட் விஷச்சாராயம் குடித்து, அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 48 நபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டோரைப் பார்ப்பதற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசியதாவது:

“இப்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 48. சிகிச்சைக்கு சிலர் தயங்கியதால் இறப்பு அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக 37 மருத்துவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கள்ளக்குறிச்சியில் கூடுதலாக 50 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. எரியும் எண்ணையில் குளிர்காயும் வகையில் உள்ளது எடப்பாடி பழனிசாமியின் பேச்சு. சிகிச்சைக்கு தேவையான மாத்திரை இல்லை என அவர் கூறியிருந்தார். ஆனால் தமிழ்நாடு முழுவதும் 4.42 கோடி மாத்திரைகள் கையிருப்பில் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்தபோது, அப்போது ஆட்சயில் இருந்தவர்களை யாரும் பதவி விலகவேண்டும் என கூறவில்லை. எனவெ இந்த சூழலைப் பயன்படுத்தி பழனிசாமி அரசியல் செய்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in