டெல்டா மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | Rain Alert | Weather Report |

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை.
டெல்டா மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | Rain Alert | Weather Report |
ANI
2 min read

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அரபிக் கடலிலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் உள் மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த நாள்களுக்கான மழை எச்சரிக்கை குறித்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 21

இதன்படி, அக்டோபர் 21 அன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 22

அக்டோபர் 22 அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்யக்கூடும் என சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 23

அக்டோபர் 23 அன்று மழையின் தீவிரம் குறைகிறது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்துக்கும் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அக்டோபர் 24

அக்டோபர் 24-ஐ பொறுத்தவரை எந்த மாவட்டத்துக்கும் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை மற்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rain Alert | Chennai Rain | Chennai Rains | Weather Report | Weather Alert | IMD Chennai | RMC Chennai | Bay of Bengal | Low Pressure | Low Pressure Area |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in