
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 7 காலை 8.30 மணியளவில் இது உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இலங்கை - தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் தருணத்தில் டிசம்பர் 11 அன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்றைய மழை நிலவரத்தைப் பொறுத்தவரை, இரு 7 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர், திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.