யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமன் ஆகியோருக்கு சாகித்ய விருதுகள் அறிவிப்பு!

யூமா வாசுகி என்ற புனைப்பெயரில் கவிதைகள், கதைகள் ஆகியவற்றை எழுதி வரும் மாரிமுத்து, `கசாக்கின் இதிகாசம்’ என்ற மொழிப்பெயர்ப்புக்கு 2017-ல் சாகித்ய விருது பெற்றார்.
யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமன் ஆகியோருக்கு சாகித்ய விருதுகள் அறிவிப்பு!

`தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறுவர்களுக்கான கதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு தமிழ் மொழிக்கான `பால சாகித்ய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. `தன்வியின் பிறந்தநாள்’ புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது.

1966-ல் பிறந்த யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. பல கவிதைகள், கதைகள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார் யூமா வாசுகி. ஓ.வி. விஜயனின் 'கசாக்கிண்ட இதிகாசம்' நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக இவருக்கு 2017-ல் சாகித்ய விருது வழங்கப்பட்டது.

`விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கு தமிழ் மொழிக்கான சாகித்ய `யுவ புரஸ்கார்’ விருது அறிவிப்பு. விஷ்ணு வந்தார் புத்தகத்தை சால்ட் பதிப்பகம் 2023-ல் வெளியிட்டது. இது லோகேஷ் ரகுராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.

1990-ல் திருவாரூரில் பிறந்த லோகேஷ் ரகுராமன் பெங்களூரில் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் சிறுகதை 'திருஷ்டி' சொல்வனம் இதழில் வெளியானது.

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் `சாகித்ய அகாடமி’ ஒவ்வொரு வருடமும் 24 இந்திய மொழிகளில் வெளியாகும் புத்தகங்களுக்கு சாகித்ய அகாடமி விருது, பால புரஸ்கார் விருது, யுவ புரஸ்கார் விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in