சூரத்தில் பாஜக வேட்பாளர் போட்டியின்றித் தேர்வு

காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தபோது..
பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தபோது..ANI

குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் மக்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக வேட்பாளராக முகேஷ் தலால் அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பானி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தத் தொகுதியில் மற்ற வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றார்கள்.

காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவும் நேற்று நிராகரிக்கப்பட்டது. இவரை முன்மொழிந்த மூன்று பேருடைய கையெழுத்து வேட்புமனு விண்ணப்பப் படிவத்தில் இல்லை என்று கூறி மனுவை நிராகரித்துள்ளார்கள். இதன் காரணமாக, சூரத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளது.

காங்கிரஸும் இல்லை, எதிர்த்துப் போட்டியிட வேட்பாளர்களும் இல்லை என்பதால், சூரத் மக்களவைத் தொகுதியில் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். சூரத் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சௌரப் பார்தி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

இவருடைய வெற்றிக்கு குஜராத் காங்கிரஸ் தலைவர் சி.ஆர். பாட்டீல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் இவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாஜக 'மேட்ச் பிக்சிங்' செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதை விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in